
மிளகாய்த் தூள் வீசி கொள்ளையிடும் குழுவை சேர்ந்த ஐவர் கைது
வீதியில் தனியாக செல்லும் பெண்களின் முகங்களில் மிளகாய்த் தூளை வீசி அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் குழுவை சேர்ந்த ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை, பன்விலாஹேனவத்த பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டிகள் இரண்டும் களவாடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
