
இலங்கையில் 1700 அதிக உயிர்களை பலிகொண்ட ரயில் விபத்து : உலக வரலாற்றில் இன்று வரை உள்ள பதிவு
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 261 என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் இது முழு உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்தாக பார்க்கப்படுகின்து.
இந்த நிலையில் உலக வரலாற்றில், மிக அதிக எண்ணிக்கையில் உயிர்களை பலிகொண்ட விபத்து இலங்கையில் கடந்த 2004 இல் நடந்ததுள்ளது.
கொழும்பு நகரில் இருந்து, கல்லேவை நோக்கி 2004 டிசம்பர் 26 ஆம் திகதி சமுத்ரா தேவி ரயில் காலை 6.30 புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் சுமார் 1500 பயணிகள் இருந்துள்ளனர். இவர்களை தவிர்த்து டிக்கெட் எடுக்காத பயணிகளும் அதிக எண்ணிக்கையில் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெல்வாட்டா கடற்கரை பகுதியில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் சென்று கொண்டிருந்தது. காலை 9.30 மணிக்கு பெராலியா என்ற கிராமத்தை ரயில் அடைந்தது. அந்த நேரத்தில் நிலநடுக்கவும் சுனாமியும் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட அதிர்வுகள் இலேசாக இருந்த போதிலும் அடுத்தடுத்து வந்த அதிர்வுகள் மிகப்பெரும் சுனாமி அலையை உருவாக்கின.
இதில் சமுத்ரா தேவி ரயில் கடலுக்குள் மூழ்கியது இதிலிருந்து வெளியே வர பயணிகள் எவ்வளவோ முயற்சித்த போதிலும் அடுத்த 10 நிமிடங்களுக்குள்ளாக மற்றொரு மிகப்பெரிய சுனாமி அலை தாக்கி ரயில் பயணம் செய்தவர்களில் 99 சதவீதமானவர்கள் பலியாகினார்கள்.
இதில் 1700 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டது இருப்பினும் 2,900 சடலங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.
மேலும் சிலர் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்கள். அந்த ரயிலில் இருந்தவர்களில் 150 பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையில் உயிர்களை பலி கொண்ட ரயில் விபத்தாக இது இன்று வரை வரலாற்றில் இடம்பெற்றதுள்ளது.



