எரிபொருள் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்
எரிபொருள் விலையில் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும் , 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
இதேவேளை மண்ணெண்ணை விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் இதன் புதிய விலை 245 ரூபாவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லங்கா கைத்தொழில் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் சில்லறை விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், புதிய சில்லறை விலையானது ரூபா. 270.
