16 வயது மகளை : வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் ஒப்படைத்த தந்தை கைது
16 வயது மகளை வட்டிக்கு பணம் கொடுத்தவரிடம் ஒப்படைத்த தந்தை உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூதாட்டத்திற்கு பணம் தேவைப்பட்டதால், 16 வயது மகளை வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம் ஒப்படைத்ததாக தந்தையார் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரான தந்தை இன்று புதன்கிழமை மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 08 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் சிறுமிக்கு 15 வயதாக இருந்த போது, தனது தந்தை சூதாட்டத்திற்கு பணம் வழங்கியவரிடம் தன்னை அறிமுகப்படுத்தியதாகவும், குறித்த நபர் சிறுமிக்கு கையடக்க தொலைபேசியொன்றையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
இதனை சிறுமியின் தாய் அறிந்த நிலையில் பொலிஸாருக்கு இந்த விடயம் குறித்து அறிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியால் வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைவாக, அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 31 வயதான அவரது மாமாவும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டிக்கு பணம் கொடுத்தவரும் பொலிஸில் ஆஜராகியுள்ளார்.
