நீராடச் சென்ற மாணவனுக்கு நேர்ந்த அவலம்

கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் நீராடச் சென்ற மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கஹடபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கம்பளை பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்