வர்த்தகரை கடத்திய மூவர் கைது
வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எடுத்து செல்லும் போது வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் மூவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 52 வயதான வர்த்தகர் ஒருவரே கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி கட்டுநாயக்க 18 ஆம் மைல்கல் பகுதியில் வைத்து கடத்தப்ட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வர்த்தகரின் உதவியாளராகப் பணியாற்றிய பெண்ணொருவரே குறித்த செயலை திட்டமிட்டு முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்