வீடொன்றுக்கு அருகில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து, இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் காணப்பட்ட இடத்திற்கு சென்ற பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதவான் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், சடலம் மீது நாளை உடற்கூற்று பரிசோதனைகள் இடம் பெறவுள்ளதாக பருத்தித்திறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (33 வயது)என்பவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்