ரயில் கடவையில் விபத்துக்குள்ளான தேங்காய் லொறி

-மன்னார் நிருபர்-

தம்புள்ளை பகுதியில் இருந்து மன்னார் நோக்கி வந்த தேங்காய் லொறி ஒன்று முருங்கன் ரயில் கடவைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக தெரிய வருகிறது.

விபத்துக்குள்ளான லொறியின் சாரதி காயங்களுடன் முருங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், லொறியில் பயணித்தவர்கள் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்