கந்தானை பகுதியில் வீட்டில் தனித்திருந்தவர் சடலமாக மீட்பு
கந்தானை வெலிகம்பிட்டிய பிரதேச வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலிகம்பிட்டிய பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் மகள் வியாழக்கிழமை தனது தந்தையைப் பார்ப்பதற்காக வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன்போது வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதே அவரது தந்தை சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்