ஆணுறுப்பை கடித்து குதறிய மனைவி: என்னை காப்பாற்றுங்கள் கணவன் அளித்த புகார்
இந்தியாவில் மத்திய பிரதேசம் மொர்ரேனா ஜவுரா பகுதியில் அங்குள்ள மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரிடம் ஒருவர் தன்னுடைய மனைவி தன்னுடைய பிறப்புறுப்பை கடித்து குதறியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார்.
உம்மத்கர் பன்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகுராஜ் குஷ்வாஹா என்பவரே இவ்வாறு புகார் வழங்கியுள்ளார்.
அதில், ‘சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி என்ற ராஜகுமாரியை நான் திருமணம் செய்து கொண்டேன். திருமணமானதில் இருந்து மனைவியின் நடத்தை சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தது. வீட்டிற்கு தினமும் ஒருவரை அழைத்து வந்து பேசுவார். வீட்டிற்கு வருவோர்களை எனது மனைவியின் உறவினர்கள் என தான் முதலில் நினைத்தேன்.
தினமும் வீட்டுக்குள் அந்நியர்கள் வந்து செல்ல ஆரம்பித்ததும் எனக்கு சந்தேகம் வந்தது. தெரியாத ஆண்கள் வீட்டுக்குள் வருவதும் போவதும் சரியல்ல என்று மனைவியிடம் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் எனது மனைவி அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் என்னையும் அவரது குடும்பத்தினரையும் பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி துன்புறுத்த ஆரம்பித்தார்” என்று குறிப்பிட்டார்.
மேலும் தனது 75 வயது தந்தை கல்யாண் சிங் மீது பொய்யான பாலியல் வழக்கை மனைவி பதிவு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அத்தோடு “நான் ஒருநாள் மனைவியை திட்டினேன் அப்போது அவள் கோபமடைந்து என்னுடைய பிறப்புறுப்பை கடித்து குதறி விட்டார். உறவினர்கள் என்னை சிகிச்சைக்காக மொரீனா மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து குவாலியர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். குவாலியரில் மருத்துவர்கள் எனது பிறப்புறுப்பில் மூன்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர்.
ஆகவே, எனது மனைவி ராஜ்குமாரி மீது வழக்குப் பதிவு செய்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என பொலிஸ் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்