விபத்தில் 8 பேர் படுகாயம்
-பதுளை நிருபர்-
ஹப்புத்தலை ஒரதரவ பகுதியில் வேன் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த 8 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
நுவரெலியாவில் இருந்து கொஸ்லாந்தை பகுதிக்கு திருமண நிகழ்வுக்கு வந்து மீண்டும் நுவரெலியா திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வேனில் பயனித்த 8 பேர் காயமடைந்த நிலையில் தியத்தலவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்