
ஏதிலி சமூகங்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தில்
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக இலங்கை ஏதிலி சமூகங்களின் ஒன்றியம் அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
இதன் போது பாகிஸ்தான், மியன்மார், ஈரான், சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏதிலிகள் பங்கேற்றிருந்தனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து வந்த ஏதிலிகளுக்கு வசதிகளை ஏற்படுத்துமாறும், அவர்கள் தமது தாய்நாடுகளுக்கு திரும்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமாறு கோரியும் இந்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும் கல்வி, மீள்குடியேற்றம், வீட்டுவசதி, வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரியிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
