
மட்டக்களப்பு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
மட்டக்களப்பு தலைமை நிலைய பொலிஸார் விடுக்கும் பாடசாலை மாணவர்களுக்கான அறிவித்தல்.
நாட்டின் அண்மைக்காலமாக சிறுவர் கடத்தல்கள் அதிகரித்துள்ளது. எனவே அதிபர் ஆகிய தாங்கள் உரிய வகுப்பாசிரியர்கள் மூலம் அல்லது காலை ஒன்றுகூடலில் கீழ்வரும் அறிவுறுத்தல்களை மாணவர்களுக்கு வழங்கவும்.
பாடசாலை முடிந்தவுடன் அனாவசியமாக வெளியில் நிற்காமல் உடன் வீடுகளுக்கு செல்ல பணிப்புரை வழங்கவும்.
இனந் தெரியாதவர்கள் ஏதாவது உண்பதற்கு கொடுத்தாலும் வாங்க வேண்டாம் என பணிப்புரை வழங்கவும்.
இனந்தெரியாதவர்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்று வீடுகளுக்கு விடுகிறோம் எனப் பணித்தால் வாகனங்னளில் ஏற வேண்டாம் என பணிப்புரை வழங்கவும்.
மாணவர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறும் அத்துடன் மேற்படி விடயங்களை பெற்றோருக்கும் தெரியப்படுத்துமாறும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கவும்.
சந்தேகத்திற்கிடமானவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் பொலிஸ் அவசர அழைப்பிற்கு தொடர்பு கொள்ளவும் : 119, 0652224356, 0652224422
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

