கல்லடி தரிசனம் பாடசாலை ஆண்டு விழா!

-மட்டக்களப்பு நிருபர்-

கல்லடி தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 31வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்படி பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை அதிபர் எஸ். இதயராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் பிரதம அத்தியாகவும், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.லிங்கேஜ்வரன் சிறப்பு அதிதியாகவும், மண்முனை வடக்கு சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ராஜ்மோகன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது 31வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில், தரிசனம் பாடசாலை மாணவர்களின் பேச்சு, பாடல் ஆகிய நிகழ்வுகள் அரங்கேறின.

இந்நூற்றாண்டுக் கொண்டிட்டத்தில் தரிசனம் பாடசாலை உப தலைவர் முருகு தயானந்தன், முன்னாள் தலைவர் எஸ்.ரவீந்திரன், தரிசனம் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்