திருமணமான பெண்ணுடன் கொண்ட காதல்: கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சாரதி

ஹம்பாந்தோட்டை  கட்டுவெவ பிரதேசத்தில் நோயாளர் காவு வண்டி சாரதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம கங்காசிறிபுர பிரதேசத்தை சேர்ந்த ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து வரும் நபரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

கட்டுவெவ பகுதியில் உள்ள வீட்டில், நேற்று சனிக்கிழமை பிற்பகல் காயமடைந்த நபர் பெண் ஒருவருடன் இருந்த போது குறித்த பெண்ணின் கணவர் அவ்விடத்திற்கு வந்து கூரிய ஆயுதத்தால் குறித்த சாரதியை தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான சாரதி பணிபுரியும் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் குறித்த பெண் தூய்மை பணியாளராக கடமையாற்றுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியை தாக்கிய நபர் ஹம்பாந்தோட்டை தலைமையக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்இ அவர் இன்று ஞயிற்றுக்கிழமை ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்