மனைவியின் தலைமுடியை மொட்டையடித்த இலங்கையர்
இங்கிலாந்தின் மென்சஸ்டரில் தமது மனைவியின் தலைமுடியை மொட்டையடித்து, அவரை இடுப்புப்பட்டியினால் தாக்கியதாக கூறப்படும் இலங்கை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் 45 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரும் அவரது மனைவியும் 2004ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று 2007ஆம் ஆண்டு மென்சஸ்டரில் குடியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த காலம் தொட்டே குறித்த இலங்கையர்இ தமது மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமது மனைவி தொழில் செய்து வந்தபோதும், கணவரான இலங்கையர் தொழில்களில் ஈடுபடவில்லை. இந்தநிலையில், தீய பழக்கங்களில் இருந்தும் மோசமான நண்பர்களிடம் இருந்தும் கணவரை காப்பாற்றும் முயற்சியின்போதே இலங்கைப் பெண், அவரது கணவரால் சித்திரவதைகளுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்த அந்த நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்