மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி
பதுளை – ரிதிமாலியத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறான பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அப்பகுதியிலுள்ள நீர் வடிகானுக்கு அருகில் குறித்த நபர் நின்றிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதன் போது அவரது கையடக்க தொலைபேசியும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சடலம் நீதவான் பரிசோதனைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்