திருமணத்தில் நடனமாட மறுத்த மணப்பெண்: மண்டையை உடைத்த உறவினர்கள்

ஆந்திரா, கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியத்திற்கும் பச்சிளம் பகுதியைச் சேர்ந்த பூஜ்ஜிதா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமண நாளன்று இரவு திருமண மண்டபத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மணமகன் வீட்டார் மணப்பெண்ணை சினிமா பாடலுக்கு நடனமாட கூறியுள்ளனர். ஆனால் மணப்பெண்ணுக்கு தனக்கு நடனமாடத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார். மணமகள் வீட்டாலும் பெண்ணுக்கு நடனமாடத் தெரியாது எனத் தெரிவித்துள்ளனர்.

இதனால் இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அங்கிருந்து நாற்காலிகளை தூக்கி வீசி தாக்கிக் கொண்டனர். இந்த தகராறில் உறவினரான பெண் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. மேலும் 3 பேர் கயமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் இரு வீட்டாரும் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்