மீண்டும் அதிகரிக்கும் கொவிட் – 19
இலங்கையில் கடந்த 20 நாட்களில் மொத்தம் 150 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, கொரோனா வைரஸ் தொடர்பான 16 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அதில் சிலர் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் எனவும் சிலர் தடுப்பூசி பெறாதவர்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட 16 பேரும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதுவரையிலும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 672,317 ஆக உள்ளது மொத்த இறப்புகள் 16,856 ஆக உள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்