O/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!
இம் முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் இதுவரை தேசிய அடையாள அட்டைய பெற்றுக்கொள்ளவில்லையெனில், உடனடியாக அதற்கான விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி அறிவித்துள்ளார்.
மேலும் விண்ணப்பித்தும் இதுவரை அதற்கான உறுதிப்படுத்தல் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரிகள் அது தொடர்பில், திணைக்களத்தில் வினவ முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி 011 522 61 26 அல்லது 011 522 61 00 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக இது குறித்த விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்