கண்ணிவெடி அகற்றிக்கொண்டிருந்த யுவதி வன்புணர்வு: இரு இளைஞர்கள் தலைமறைவு

முல்லைத்தீவு  வெலிஓயா பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தம்முடன் பணியாற்றி யுவதி ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு இளைஞர்கள் குறித்த பெண்ணை தங்களுடைய தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் இதனால் குறித்த பெண் பயந்து ஓடிச்சென்ற வேளையில் அவர் ஓரிடத்தில் தவறி விழுந்துள்ளார்.

இதனையடுத்துஇ மற்றொரு குழுவினர் அவரை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் குறித்த இரண்டு இளைஞர்களுடன் அவர் சண்டையிட்டுள்ளதுடன், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இத்துடன் இது தொடர்பாக தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என கண்ணிவெடி அகற்றும் அமைப்பு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்வதற்காக முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்