16 வயதான சிறுமியைக் கடத்த முயற்சி ?

அனுராதபுரம் மதவாச்சி நகருக்கு அருகில் 16 வயது சிறுமியை பலவந்தமாக கடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் சிறுமியின் தாய் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடத்தல் முயற்சி இடம்பெற்றதாக கூறப்படும் இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகள் தொடர்பான விசாரணையில் அவ்வாறான கடத்தல் முயற்சி எதுவும் இடம்பெற்றதாகத் தகவல்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், வீதியில் காணப்படும் ஏனைய சிசிடிவி காட்சிகளை மதவாச்சி பொலிஸார் பரிசோதித்து, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்