நடராஜர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது

வவுனியாவிலுள்ள ஆலயமொன்றிலிருந்து பழமை வாய்ந்த நடராஜர் சிலையொன்றை திருடிய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் திருடப்பட்ட சிலையை எடுத்துச் சென்றபோது, ​​வீதியின் அருகே நின்று கொண்டிருந்த வாடகை வாகன சாரதிகள் சந்தேகமடைந்து, இராணுவ சிப்பாயை நிறுத்தி சோதனையிட்ட போது, ​​இந்த சிலை மீட்கப்பட்டது.

இதனையடுத்து, இராணுவ சிப்பாயை தமது பாதுகாப்பில் வைத்து, வவுனியா பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அதிகாரிகளால் சந்தேகநபரான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதுடன் சிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வவுனியா நீதவான் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியதையடுத்து, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்