போதைப்பொருளுடன் கைதான பெண்

பாணந்துறை தெற்கு மொதரவில பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து 8 கிராம் 240 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைதான சந்தேக நபர் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்