பால்மாவின் விலை குறைக்கப்படாது – பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்

வர்த்தக அமைச்சர் அறிவித்தது போல எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா தொகை  இன்னும் கையிருப்பில் உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை ரூபாவுக்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதால்  எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இறுதியாக  கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பால்மாவின் விலை குறைக்கப்பட்டது.

இந்தநிலையில்  எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்று வர்த்தக அமைச்சர் அறிவித்திருந்தார்.

எனினும்  வர்த்தக அமைச்சரின் இந்த அறிவிப்பை மறுத்த பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்  பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்