திருமணமான காதலியை சுட்டுக்கொன்று விட்டு தானும் உயிரிழந்த இளைஞன்

வவுனியா – பறயனாலங்குளம் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பூவரசங்குளம் – நீலியாமோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே தாக்குதல் நடத்தியுள்ளார்.

உயிரிழந்த பெண் திருமணமாகி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் நீலியமோட்டை பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.

திருமணத்திற்கு முன்னர் அந்தப் பெண்ணை சந்தேக நபர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

திருமணத்தின் பின்னரும் அவர் அந்த பெண்ணுக்கு இடையூறுகளை செய்து வந்ததாக பிரதேச மக்கள் nரிவிக்கின்றனர்.

இன்று சனிக்கிழமை அதிகாலை அவர் அந்தப் பெண்ணை சுட்டுக் கொன்றார் என பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலையின் பின்னர், சந்தேக நபர் நீலியமோட்டை கோவிலுக்கு அருகில் வந்து தன்னைத்தானே சுட்டு  அவரும் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்