திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என் ஜயவிக்ரம அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், முப்படை, பொலிஸ், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு இரத்த தானத்தை வழங்கினர்.

மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தினால் வருடா வருடம் இந்த இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையினுடைய இரத்த வங்கியினுடைய வைத்திய அதிகாரிகள் உட்பட அவற்றின் குழுவினர் இரத்ததானம் பெறுகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டனர். இரத்த தானம் வழங்குகின்ற நிகழ்வை மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட உயர் அதிகாரிகள் வருகை தந்து பார்வையிட்டனர்.

இதன்போது 77 பேர் இரத்த தானத்தை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்