எமிரேட்ஸ் ஊழியர்களுக்கு 6 மாதகால சம்பளம் போனஸ்

எமிரேட்ஸ் குழுமம் அதன் மிகவும் இலாபகரமான ஆண்டை வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள், 100,000 ஊழியர்களுக்கு 24 வார போனஸ் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

எமிரேட்ஸ் நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட போதிலும் , பல ஊழியர்கள் “கலீஜ் டைம்சுக்கு” ஊக்கத்தொகையை உறுதிப்படுத்தும் மின்னஞ்சல்களைப் பெற்றதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

வியாழக்கிழமை குறித்த நிறுவனம் இதன் 2022-23 ஆண்டு அறிக்கையை வெளியிட்டது மற்றும் 3.0 பில்லியன் அமெரிக்கன் டொலர் ஆண்டு இலாபத்தை பதிவு செய்தது. கடந்த ஆண்டு நிறுவனத்தின் நஷ்டத்தில் இருந்து இது ஒரு முழுமையான திருப்பமாகும் என எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.