
நாடு முழுவதும் பரவும் மூன்று வகையான காய்ச்சல்
நாட்டில் மூன்று வகையான காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு, எலிக்காய்ச்சல் மற்றும் இன்புளுவென்சா ஆகியவை மிக வேகமாக பரவி வருவதாகவும் அவற்றின் அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தலைவலி, உடல்வலி, சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் மூன்று வகையான காய்ச்சலிலும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் டெங்கு காய்ச்சலே மிக வேகமாக பரவி வருதாகவும் ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 2000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
