
மூன்று பேரின் DNA களுடன் குழந்தையா?
இங்கிலாந்தில் முதல் முறையாக மூன்று பேரின் டி.என்.ஏ (DNI) மூலம் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இக்குழந்தையின் டிஎன்ஏவில் உள்ள பெரும்பாலான பகுதிகள் அந்த குழந்தையின் பெற்றோர்கள் உடையது. ஆனால் 0.1 சதவீதம் மட்டும் மூன்றாம் நபரான கருமுட்டை தானமாக அளிக்கும் பெண்ணுடையது என தெரிவிக்கப்படுகின்றது.
இது முழுக்கமுழுக்க மைட்டோகாண்ட்ரியா என்ற மருத்துவமுறை உருவாக்கம் தொடர்பானதாக மட்டுமே இருக்கும்.
இம்மாதிரியான மருத்துவமுறை மைட்டோகாண்ட்ரியா தொடர்பான நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்குமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மரபணு சங்கிலியில் செய்யப்பட்ட இந்த மாற்றம், நிரந்தரமாக அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் வழிவழியாக கடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
