
சிறுமிகளின் படங்களை முகநூலில் பதிவிட்டவர் கைது
யாதவர வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் பேஸ்புக் சமூக ஊடகங்களில் சிறுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராக பணிபுரிந்து வரும் 40 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ” Niloo Niloo” என்ற போலி கணக்கை உருவாக்கி அதில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்யும் வகையில் படங்களை பதிவிட்ட நபர் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த நபர் இரண்டு முறை திருமணம் செய்து தற்போது விவாகரத்து பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் இன்று வியாழக்கிழமை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
