ரஷ்யாவில் காட்டுத்தீ – 21 பேர் உயிரிழப்பு

ரஷ்யா மற்றும் சைபீரியாவின் எல்லையில் அமைந்துள்ள யூரல் மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி 25 பேர் பலியாகியுள்ளனர்.

குர்கான் மற்றும் சைபீரியாவின் டியூமென், ஓம்ஸ்க் ஆகிய மாகாணங்களில் உள்ள பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 5000 க்கும் அதிகமான வீடுகள், ஆயிரக்கணக்கான எக்டேர் விவசாய நிலங்கள் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளதுடன் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. எனவே பலியானோரின் எண்ணிக்கை உயரலாம் என கருதப்படுகின்றது.

காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில் அவசர நிலை உத்தரவை பிறப்பித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. 

கோடை வெயில் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்