
தோல்வியில் முடிந்த துப்பாக்கிச் சூடு
மிதிகம பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரை, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுக் கொல்லை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வர்த்தக நிலையத்தின் உள்ளே இருந்த போது, ரீ56 துப்பாக்கியை பயன்படுத்தி நேற்று செவ்வாய்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டுள்ளனர், எனினும் துப்பாக்கி இயங்காததால் இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், ஹரக் கட்டா என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நதுன் சிந்தகவை விடுதலை செய்யக் கோரிய போராட்டத்தை ஏற்பாடு செய்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
