62 வயது பெண்ணை திருமணம் செய்வதாக 32 வயது இளைஞன் காதல் மோசடி

இந்தியாவில், அமெரிக்க பெண்ணெருவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இளைஞர் ஏமாற்றியுள்ளதாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா வந்த 62 வயதான பெண் ஆக்ராவில் 32 வயதான ககன்தீப் என்பவர் வைத்திருந்த ஹோட்டலில் தங்கியுள்ளார். ககந்தீப் ஹோட்டலில் தங்கியிருந்ததால் அவருடன் பழக்கம் ஏற்பட்டுஇ அவர்கள் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். பின்னர் அவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

இதையடுத்து, அந்த அமெரிக்க பெண் அவ்வப்போது இந்தியா வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்தியா வரும் அப்பெண்ணை, திருமணம் செய்வதாக கூறி ககன்தீப் அவருடன் பாலியல் ரீதியாக பலமுறை உறவு வைத்துள்ளார்.

மேலும் அமிர்தசரஸ், டெல்லி போன்ற இடத்திற்கு எல்லாம் அழைத்து சென்று சுற்றியுள்ளார். இவையெல்லாம் ககன்தீப்பின் குடும்பத்தினருக்கும் தெரிந்தே நடந்ததாக கூறப்படுகிறது. தன்னிடம் பாலியல் ரீதியாக உறவு மட்டுமே வைத்துக்கொண்டு திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததால் அவர் மீது அப்பெண்ணுக்கு சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து கடந்த மே 4ஆம் திகதி டெல்லியில் இருக்கும் விவேக் விஹார் காவல் நிலையத்தில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த அமெரிக்க பெண் புகார் அளித்துள்ளார். பின்னர் ககன்தீப் மீது ஐ.பி.சி 376இ 328 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமெரிக்க பெண் கொடுத்த புகாரின் பேரில், பொலிஸார் ககன்தீப்பை கடந்த மே 6ஆம் தேதி ஆக்ராவில் கைது செய்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்