கிரானில் முதியவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு

கிரான் முறுத்தானை பகுதியில் வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சித்தாண்டியைச் சேர்ந்த க.கிருஷ்ணப்பிள்ளை (வயது-74) என்ற முதியவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முறுத்தானையில் உள்ள வயல் வாடியில் அயலவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது கத்தியுடன் வந்த நபர் ஒருவர் முதியவரை தலையில் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கமே கொலையில் முடிந்துள்ளதாக தெரியவருகின்றது.

படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக, வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எச்.எம்.றம்சீன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.