நுவரெலியாவை சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கு குழு நியமனம்

நுவரெலியாவை சிறந்த சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நுவரெலியாவை சுற்றுலாத்தளமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்