வைத்தியசாலையில் ஆக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்பனை:ஆறுவர் கைது
பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இருந்து 80 ஆக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் மருத்துவமனையின் ஊழியர் ஒருவரும், ஆக்ஸிஜன் விநியோகத்தில் ஈடுபடும் ஒரு உட்பட ஐவர் அடங்குகின்றனர்.
மார்ச் 2020 முதல் குறைந்தது 208 சிலிண்டர்கள் காணாமல் போயுள்ளதாக மருத்துவமனை இயக்குநர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
