பாடசாலை மாணவியின் சடலம் : நிர்வாணமாக மீட்பு

களுத்துறை பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

களுத்துறை, காலி வீதியின் பிரதான வீதியில் உள்ள ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள ரயில் பாதைக்கு அருகில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் களுத்துறை நாகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் சனிக்கிழமை மாலை மற்றொரு இளம் பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் ஹோட்டலுக்கு வந்ததாகவும், ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்ததாகவும் தெரியவருகின்றது.

பொலிசாரின் விசாரணைகளின்படி, சில மணித்தியாலங்களின் பின்னர் ஒரு இளம் ஜேடியினர் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் இறந்தவருடன் இருந்த நபரும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, விடுதிக்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இந்தக் குழுவில் இருந்த மற்றைய இளைஞனையும் பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த நபருடன் சென்ற இளைஞரைக் கண்டுபிடிக்கும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமியின் உடலின் பல பாகங்களில் கீறல்கள், வெட்டுக்காயங்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்