பெண் பாலியல் துஷ்பிரயோகம்: 27 வயது இளைஞனும் தந்தையும் கைது
பெண்ணெருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞன் மற்றும் அவனது தந்தை இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகந்த சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனும் அவரது தந்தையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான 47 வயதுடைய பெண் பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை குறித்த சந்தேக நபர் ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வீட்டிற்கு வந்துள்ளார், அவ் வேளையில் வீட்டில் யாரும் இல்லாததை உணர்ந்து பெண்ணை வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அப்போது, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை மடக்கிப் பிடித்த போதும், இளைஞனின் தந்தை வந்து அவரை மீட்டுள்ளார்.
அதன் பின்னர் குறித்த இளைஞனும் தந்தையும் வெலிகந்த காவல்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்