நீரில் மூழ்கி சிறுமி பலி
இரத்தினபுரி பெலிஹூல் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நேற்று சனிக்கிழமை காணமல் போன நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அவர்களில் 13 வயது சிறுமி நீரில் மூழ்கிய போது அவரை மீட்பதற்கு முயற்சித்த 12 வயது சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் 13 வயதான சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் காணாமல் போயுள்ள 12 வயது சிறுவனை தேடும் பணிகள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்