வெசாக் தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் சிவில் உத்தியோகத்தர்கள் இதற்காக நியமிக்கப்படுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக இடம்பெறும் தானசாலைகளில் சுகாதார பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக மூவாயிரம் பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த முறை 7160 தானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்