
கஞ்சா தோட்டம் முற்றுகை : ஒருவர் கைது
பதுளை நிருபர்-
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டவளை சொரபொரஜனபதய பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்ட தோட்டம் ஒன்றை மஹியங்கனை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை சுற்றிவளைத்த போது பயிரிடப்பட்ட 5 அடி உயரமான 44 கஞ்சா செடிகளை மஹியங்கனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது வட்டவளை சொரபொர மஹியங்கனை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபரை மஹியங்கனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்