தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம்
பொரளை தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கான அனுமதியை தற்காலிகமாக இடை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவே இவ்வாறு பரிந்துரை செய்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன் படி குறித்த தனியார் வைத்தியசாலையில் விசாரணைகள் முடியும்வரை அனைத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளையும் இடைநிறுத்துமாறு அக்குழு பரிந்துரைத்துள்ளதாக இன்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அவர் அறிவித்திருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்