அமெரிக்க தடகள வீராங்கனை டோரி போவி வீட்டில் சடலமாக மீட்பு

புளோரிடாவில் வசித்து வரும் அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஓட்டப்பந்தய வீராங்கனை ( வயது – 32 )  டோரி போவி நேற்று புதன் கிழமை காலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

டோரியின் வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவர் மரணத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

டோரியின் மரணத்தை அவருக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. ஒரு நல்ல தோழியை, மகளை, சகோதரியை நாங்கள் இழந்திருக்கிறோம் என அந்த நிறுவனம் தங்களது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

 

டோரி போவி ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனையாவார். கடந்த 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கங்களை வென்றுள்ளார். அதோடு 2017 ஆம் ஆண்டு இவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் உலக சாம்பியனாக முடி சூட்டப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

டோரியின் மரணத்திற்கு உலக தடகள சம்மேளனமும் இரங்கல் தெரிவித்துள்ளது. அர்ப்பணிப்புடன் தடகளப் போட்டிகளில் கோலோச்சி வந்த டோரியி் மரணம் அதிர்ச்சியளிப்பதாக ட்விட்டரில் பதவிடப்பட்டுள்ளது.

டோரி போவியின் மரணத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்தும் தடகள் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்