பறக்கும் விமானத்தில் பாலியல் தொல்லை: ட்ரம்ப் மீது 81 வயது மூதாட்டி புகார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்ப் மீது பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மான்ஹாட்டன் பெடரல் நீதிமன்றத்தில் புகார் வழங்கியுள்ளார்.

 

அதன்படி, 1978 இல் விமானப் பயணம் மேற்கொண்ட போது அதில் ட்ரம்ப் சக பயணியாக வந்ததாகவும், அப்போது எதிர்பாராத விதமாக தனக்கு முத்தம் கொடுக்க முயற்சித்தும், மார்பகங்களை சீண்டியும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும்  மேலும், தனது ஸ்கர்ட் உடையில் அத்துமீறி கை வைத்து தொல்லை கொடுத்ததாகவும் அவர் புகாரில் கூறியுள்ளார்.

ஜெஸ்சிக்கா லீட்ஸ் (வயது –  81)  என்ற பெண்ணே இவ்வாறு ட்ரம்ப் மீது புகார் வழங்கியுள்ளார்.

தற்போது அடுத்த தேர்தல் விரைவில் வரப்போகும் நிலையில், ட்ரம்ப் மீது இது தொடர்பான வழக்கு தொடரப்படடுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்