2 தலை ஒரே உடல் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகள்: ஒருவருக்கு காதலன்
அமெரிக்காவில் லூபிடா மற்றும் கார்மென் என்கிற இரட்டை சகோதரிகள் வசிக்கின்றனர்.ஆனால் இவர்கள் மற்றைய இரட்டை சகோதரர்கள் போலில்லாமல் இவர்களின் உடல் இடுப்போடு இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சகோதரிகள் பிறந்ததும், அவர்கள் 3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் தற்போது தங்கள் வாழ்நாளில் 22 வருடங்களை அவர்கள் கழித்துள்ளனர்.
அவர்களின் உடலில் ஒரே ஒரு இனப்பெருக்க உறுப்பு மட்டுமே உள்ளது. இது தவிர, அவர்களது உடலின் இரத்த ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும்.
லூபிடா மற்றும் கார்மென் இரு சகோதரிகளில் கார்மனுக்கு ஒரு ஆண் நண்பர் இருக்கிறார். டேட்டிங் ஆப் மூலம் அவர் டேனியலை சந்தித்துள்ளார்.
டேட்டிங் செய்வதற்கு முன், இருவரும் இதைப் பற்றி மிகவும் ஆழமாக உரையாடியதாக கூறுகிறார்கள். ஒவ்வொரு விஷயம் குறித்தும் இருவரும் ஆழமாக விவாதித்துள்ளனர். இதன் காரணமாக, கார்மென் மற்றும் டேனியல் இருவரும் உடல் ரீதியான உறவில் கவனம் செலுத்தாமல், ஆத்மார்த்தமான அன்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சிங்கிளாக இருக்கும் லூபிடா விரைவாக தூங்கிவிடுவார். அதன் பிறகு கார்மனும் டேனியலும் நிறைய பேசுகிறார்களாம். டேட்டிங் என்று வரும்போது, அந்த நாளை செலெக்ட் செய்யும் வாய்ப்பை லூபிடாவிடம் கொடுத்து விடுகிறார் கார்மென். இவ்வாறு சமரசம் செய்து கொண்டு, சகோதரிகள் இருவரும் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் ரசிக்கிறார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்