குளவிக்கொட்டுக்கு இலக்கான வெளிநாட்டு தம்பதியினர்

பதுளை தெமோதரை 9 வளைவு பாலத்திற்கு அருகில் வைத்து, வெளிநாட்டு பயண வலைபதிவாளர்கள்,  இருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான லீன் மற்றும் டான் அண்மையில் திருமணமானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தர்ப்பத்தில், லீன் என்பவரைத் தாக்கிய குளவிகளை அவரின் உடலில் இருந்து அகற்றுவதற்கு பொலிஸார் அதிகாரி ஒருவரும், மற்றுமொருவரும் உதவியதாகவும், இதன்போது அவர்கள் 15 குளவிகளை லீனின் உடலில் இருந்து அகற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளியையும் அவர்கள், தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்