புது மாப்பிள்ளையை வெட்டிய முன்னாள் காதலி
மதவாச்சி பகுதியில் புதிதாக திருமணம் செய்து கொண்ட இளைஞனை முன்னாள் காதலி வெட்டி காயப்படுத்தியுள்ளார்.
பொகஹருவ பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன், நேற்று முன்தினம் திங்கட்கிழமை பொலன்னறுவை செவணபிட்டிய பகுதியைச் சேர்ந்த தனது முன்னாள் காதலியுடன் மதவாச்சியில் விடுதியொன்றில் தங்கியிருந்த போதே இவ்வாறு காதலியால் தாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அந்த யுவதியும் அளவுக்கதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு மயக்கமடைந்த நிலையில் இருவரும் விடுதியின் உரிமையாளர் மற்றும் பணியாளர்களால் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காதலன் சில தினங்களுக்கு முன்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததை அறிந்து கொண்ட காதலி அவரை சந்திக்க வரும் போது கத்தியை மறைத்து எடுத்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்