மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள வாகனம் திருத்தும் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

ஆத்திசூடி வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வராசா சுஜீதரன் (வயது-40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாகன திருத்துமிடத்தில் ஒட்டுவேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மின்சார தாக்குதலுக்கு இலக்கானதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.