நீர்தேகத்திலிருந்து சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவத்தனர்.

மேல் கொத்மலை சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 35ற்கும் 50ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க ஆண் எனவும், மேலதிக விசாரணைகளை இடம்பெற்று வருவதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்